சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதியளித்து இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வந்தது. அதில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா;
அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாடு வராமல் வேறு மாநிலம் சென்றதுபோல் எந்த நிறுவனமும் தற்போது போகாது என உறுதியாக தெரிவித்தார். அதேபோல் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட கையாண்டார். சாம்சங் பணியாளர்கள் மீதும், தொழிலாளர்கள் மீதும் அந்நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கையே மேலும், தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி சாம்சங் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக நேற்றைய தினம் இதை உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது சாம்சங் நிறுவனம்: சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.