தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விருப்பம் :சுவீடன் நாட்டு தூதர் ஜான் திஸ்லெஃப் தகவல்

11 hours ago 2

சென்னை :தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. தமிழக அரசு, வரும் 2030க்குள், தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்த, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, பல்வேறு நிறுவனங்களின் தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து சுவீடன் தூதர் தலைமையில் 15 நிறுவன அதிகாரிகள் குழு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுடன் சந்திப்பு மேற்கொண்டனர். தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் அமைச்சருடன் 15 நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், ஐகியா உள்பட 4 நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக சுவீடன் நாட்டு தூதர் ஜான் திஸ்லெஃப் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 70 சுவீடன் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 25,000 பேர் பணிபுரிகின்றனர்.டிரெல்போர்க் மெரைன் சர்வீசஸ், சாப், கேம்ஃபில் மற்றும் ஐகியா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அதே சமயம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுவீடன் நிறுவனங்கள் சில தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன. இதனிடையே சென்னையில் ஸ்கேண்டினாவியான் ரோபோட் சிஸ்டம்ஸ் புதிய தொழிற்சாலையை 2025 ஜன. 24ல் தொடங்குகிறது. கோவையில் ஜேகோபி நிறுவனம் தனது புதிய ஆலைக்கான பணியை 2025 ஜனவரி 22-ல் தொடங்குகிறது.

The post தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விருப்பம் :சுவீடன் நாட்டு தூதர் ஜான் திஸ்லெஃப் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article