சென்னை: தமிழ்நாட்டில் மழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டுமே 3,844 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது. இதன் காரணமாக 15-ம் தேதிபல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 4.30 மணியளவில் சென்னைக்கு வடக்கே புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையை கடந்தது.
இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ தேதி நெருங்கிய 2,388 கர்ப்பிணிகள் 15-ம் தேதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 16-ம் தேதி 3,314 கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 15, 16-ம் தேதிகளில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட 3,844 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக பொதுசுகாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் மழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டுமே 3,844 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்: பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.