தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

1 week ago 3

திருவண்ணாமலை, நவ.8: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: நடிகர் விஜய் அரசியல் இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் ஒரு மாநாட்டையும் நடத்தி முடித்திருக்கிறார். எனவே, அவருக்கு ஏற்கனவே நான் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறேன். எதிர்காலத்தில் எந்த இலக்கை நோக்கி அவர் அரசியலில் பயணிக்கிறார் என்பதை பொறுத்துதான் நாம் கருத்துக்களை சொல்ல முடியும். விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து தேர்தல் வரும்போது தெரிவிக்கப்படும்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொண்டர்கள், அதிமுக இணைய வேண்டும் என்று கூக்குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது அது நடந்து கொண்டிருக்கிறது. 2026க்கு முன்பாக அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் எழுச்சியோடு ஒன்று சேர்ந்து மீண்டும் அதிமுக ஆட்சியை நிலை நிறுத்துவார்கள். திராவிடம் குறித்து சீமான் பேசுவது அவருடைய வாதம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டி- ஷர்ட் அணிவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், உடை அணிவது அவரவர் விருப்ப உரிமை. அதை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் என்ன உடை அணிய வேண்டும் என்று எந்த சட்ட விதி முறையாவது இருக்கிறதா என்ன என்றார்.

The post தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article