புதுடெல்லி: தமிழ்நாட்டில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி வரையிலான நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி பாஜ வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார் இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை மற்றும்எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பான அறிக்கையை அளிக்க உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் வழக்கறிஞர் விஜய் ஹசாரியாவை நியமித்து இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் விஜய் ஹசாரியா தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் 4732 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்
The post தமிழ்நாட்டில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கு 220 நிலுவையில் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.