சென்னை: தமிழ்நாட்டில் திமுக – தவெக இடையேதான் போட்டி என்ற விஜய் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எப்போதும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக மீது குறை சொல்ல எதுவும் இல்லாததால் எங்கள் கட்சியை விஜய் விமர்சிக்கவில்லை. திமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே விஜய் அப்படி பேசியுள்ளார் என அவர் கூறினார்.
The post தமிழ்நாட்டில் எப்போதும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!! appeared first on Dinakaran.