சென்னை: தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;
தமிழ்நாட்டில் கடந்த 2024ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒட்டுமொத்தமாக 27,378 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 நபர்கள் உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,687 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, அதே மாதத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 2023ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஒட்டுமொத்தமாக 9,121 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2024-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 3 மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதேபோல் 2024 ஆம் ஆண்டு 343 நபர்களுக்கு மலேரியா பாதிப்பும், 2,817 பேருக்கு டைஃபாய்டு காய்ச்சல் பாதிப்பும் பதிவாகி உள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.