தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஜூலை 6ம் தேதி வரை இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

9 hours ago 2

சென்னை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று (9ம் தேதி) முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600 என்றும், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300 செலுத்த வேண்டும்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பப்பட உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு, தொழில்முறை கல்வி பாட பிரிவினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீட்டு என்று சிறப்பு இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளது. வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். ஜூன் 16ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. வேளாண்மை பல்கலைகழகம் துணைவேந்தர் நியமனம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

The post தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஜூலை 6ம் தேதி வரை இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article