தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு

2 months ago 11

சென்னை,

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முன்தினம் முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பட்டாசு இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்றும், நேற்றிரவு 9 மணி நிலவரப்படி பட்டாசு விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்ததாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Read Entire Article