சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நேற்று சென்னை மண்ணடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில துணைத்தலைவர் கே.தாவூத் கைசர் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் அப்துர் ரஹீம், மாநில செயலாளர்கள் கே.சித்திக், அப்துல் முஹ்சின், அல் அமீன், பெரோஸ் கான் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைப்பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் நிருபர்களிடம் கூறுகையில், “வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) வக்பு வாரிய திருத்த மசோதாவை கொண்டு வந்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளோம்” என்றார்.
The post தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு வக்பு மசோதா வாபஸ் வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை appeared first on Dinakaran.