கும்பகோணம், பிப்.22: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி நிர்வாக இயக்குநர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி நிர்வாக இயக்குநர் பொன்முடி தலைமையில் அனைவரும் நேற்று எடுத்துக்கொண்டனர். அப்போது “எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவரப் பாடுபடுவோம்.
தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்தாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலக தாய்மொழி நாளான இன்று (நேற்று) உளமாற உறுதி கூறுகிறேன் என நிர்வாக இயக்குநர் பொன்முடி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
The post தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் தலைமையகத்தில் தாய்மொழிநாள் உறுதியேற்பு appeared first on Dinakaran.