தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் விவகாரம் குறித்து ஆளுநருக்கு முதலமைச்சர் கேள்வி

4 weeks ago 7
தூர்தர்ஷன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்படாதது குறித்து அந்த மேடையிலேயே கண்டித்திருக்கலாமே என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட என்ற வார்த்தை விடுபட்டது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்தை பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன் என்று சொல்லும் ஆளுநர், உரிமையோடு அந்த இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டி, சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே என்று குறிப்பிட்டுள்ளார். துல்லியமாக அந்தச் செயலை செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாகக் கூறும் மத்திய அரசு, தமிழ் மொழிக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்காக 2 ஆயிரத்து 435 கோடி ரூபாய் செலவிட்டுள்ள மத்திய அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு 167 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Read Entire Article