தமிழ்த் திரையுலகில் ரஜினியின் 50 ஆண்டுகள்

1 month ago 4
நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று 74-வது பிறந்தநாள். தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு... 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் இந்தக் காட்சியில் தொடங்கிய ரஜினியின் திரையுலகப் பயணம் இன்று வரை வெற்றிக் கொடி கட்டிப் பறந்து வருகிறது. ஆரம்பத்தில் வில்லனாகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும், இரண்டாவது நாயகனாகவும் நடித்து வந்த ரஜினிக்கு திருப்பு முனையாக அமைந்தவை புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, பைரவி போன்ற படங்கள்... தொடர்ந்து இந்தியில் அமிதாப் நடித்த வெற்றிப் படங்கள் ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றன. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டதால், அதுவே அவரது அடையாளமாகி போனது.ரஜினியின் வசன உச்சரிப்பு, ஸ்டைல் ,ஸ்டன்ட், சுறுசுறுப்பு ஆகியவை திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றுத் தந்தன. முரட்டுக்காளை, முள்ளும் மலரும் , தளபதி, ராகவேந்திரர் போன்ற படங்களில் தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினார் ரஜினி. தெலுங்கு, கன்னடம்,இந்தி, வங்காளப் படங்களில் நடித்து அந்தந்த மாநில ரசிகர்களையும் கவர்ந்தவர் ரஜினி.. இந்தியா மட்டுமின்றி ஜப்பான் போன்ற நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.. 1970- 80களில் தொடங்கி, இன்றைய 2கே கிட்ஸ் வரையிலும் ரசிகர்களைப் பெற்றிருப்பதால், 171-வது படத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு களமிறங்கியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...
Read Entire Article