தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழிச்சட்ட விழிப்புணர்வு பேரணி

4 months ago 12

 

தஞ்சாவூர், ஜன. 7: தமிழ்நாடு அரசு தஞ்சை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி நேற்று ரயிலடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சபீர்பானு தலைமை தாங்கினார். பேரணியை உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு அன்னைத் தமிழே ஆட்சி மொழி, தமிழில் பெயர் பலகை அமையட்டும்,தமிழ்நாட்டின் வீதி எல்லாம் தமிழ் தழைக்கட்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்டி சென்றனர். செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். பேரணிக்கு முன்னே மாணவர்கள் சிலம்பம் சுற்றியப்படி சென்றனர். பேரணியானது பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் முடிவடைந்தது.

The post தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழிச்சட்ட விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article