சென்னை: தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்பது பற்றிய புத்தகங்களை ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்ற நூலை தர வேண்டும்
தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்பது பற்றிய புத்தகங்களை ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு தர வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுகள்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,450 வழங்குக-ராமதாஸ்
தமிழ்நாட்டில் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,450 கொள்முதல் விலை வழங்க வேண்டும்.
மகளிர் உரிமை தொகையை ரூ.2,000ஆக உயர்த்துக
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.
ராஜ்யசபா சீட் பற்றி கேட்கப் போவதில்லை
ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவிடம் கேட்பது குறித்து ராமதாஸ் எதுவும் கூறவில்லை. கட்சி நலன் தாண்டி, மக்கள் நலன், நாட்டு நலன் குறித்து முடிவெடுப்போம். பாமக தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா பதவி நிறைவடைய உள்ள நிலையில் ராமதாஸ் பேட்டி அளித்தார்.
The post தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்பது பற்றிய புத்தகங்களை ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு தர வேண்டும்: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.