சென்னை: தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர குற்ற ஆவண காப்பகம் இன்ஸ்பெக்டராக இருந்த சீதாராமனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், ஆவடி திருமுல்லைவாயல் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த மாதேஸ்வரன் சென்னை பெருநகர வரதட்சணை பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை பெரவள்ளூர் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில் குமார் சென்னை பெருநகர கொளத்தூர் உதவி கமிஷனராகவும்,
சென்னை நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சங்கர நாராயணன் சென்னை பெருநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராகவும், தாம்பரம் கானத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த பாலகுமரன் செங்கல்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், ஆவடி காட்டூர் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த சாம் வின்சென்ட் தாம்பரம் நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த மணிவண்ணன் ஆவடி மாநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராகவும்,
சென்னை புளியந்தோப்பு சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த சிபுகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு சிறப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபாலகுரு சென்னை பெருநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த விநாயகமூர்த்தி சென்னை சைபர் க்ரைம் பிரிவு டிஎஸ்பியாகவும், பல்லாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த கோவிந்த் ஆவடி மாநகர மத்திய குற்றப்பிரிவு-1 உதவி கமிஷனராகவும்,
தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த என்.எஸ்.குமார் ஆவடி மாநகர மக்கள் தொடர்புத்துறை உதவி கமிஷனராகவும், சென்னை தரமணி சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த பொன்ராஜ் சென்னை தலைமையிட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், தாம்பரம் மாநகர நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சங்கர் சென்னை க்யூ பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும், ஆவடி மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த வேலு சென்னை மெட்ரோ-2 சிபிசிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை சிறப்பு பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ், காஞ்சிபுரம் சிறப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மெரினா சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த மணிவண்ணன் சென்னை பெருநகர எம்.கே.பி.நகர் உதவி கமிஷனராகவும், சென்னை மடிப்பாக்கம் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த கண்ணன் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் என தமிழ்நாடு முழுவதும் 83 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி பணிநியமனம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், புதிதாக டிஎஸ்பிக்காக பதவி உயர்வு பெற்று பணி நியமனம் செய்யப்பட்டதால், அந்த இடங்களில் பணியாற்றிய சென்னை எம்.கே.பி.நகர் உதவி கமிஷனராக இருந்த சச்சிதானந்தம், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த சரண்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு பிரிவில் இருந்த சம்பத், ஆவடி மத்திய குற்றப்பிரிவு-1 இருந்த கந்தகுமார் உள்ளிட்ட 16 டிஎஸ்பிக்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடப்பட்டுள்ளார்.
The post தமிழகம் முழுவதும் பதவி உயர்வு பெற்ற 83 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக நியமனம்: 16 டிஎஸ்பிக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு appeared first on Dinakaran.