தமிழகம் முழுவதும்; நாளை முதல் 9ம் தேதி வரை தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

3 months ago 24

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பாஜ பரப்பி வருகிற பிரசாரத்தை முறியடிக்கிற வகையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருவள்ளுர் வடக்கில் நடைபெறும் விழிப்புணர்வு நடைபயணத்தில் சசிகாந்த் செந்தில் எம்.பி., துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., டி.எல்.சதாசிவலிங்கம், திருவள்ளுர் தெற்கில் முன்னாள் எம்பி ஏ.செல்லக்குமார், ஆவடி மாநகர் கீழானூர் ராஜேந்திரன், வடசென்னை கிழக்கு முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், வடசென்னை மேற்கு இமயா கக்கன், மத்தியசென்னை கிழக்கு சொர்ணா சேதுராமன், மத்தியசென்னை மேற்கு நாசே ஜெ.ராமச்சந்திரன், தென்சென்னை கிழக்கு ஜே.எம்.எச்.அசன் மவுலானா எம்.எல்.ஏ, தென்சென்னை மத்தி டாக்டர் கே.விஜயன், தென்சென்னை மேற்கு முன்னாள் எம்பி கே.ராணி, செங்கல்பட்டு வடக்கு பீட்டர் அல்போன்ஸ், செங்கல்பட்டு தெற்கு அருள் அன்பரசு, காஞ்சிபுரம் பெ.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்பார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post தமிழகம் முழுவதும்; நாளை முதல் 9ம் தேதி வரை தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article