தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறியதாக 40,000 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

2 months ago 18
சாலை விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 40 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சாலை விபத்துகளில் பத்தாயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றதாக ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 97 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 624 வழக்குகளும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாக 35 லட்சத்து 78 ஆயிரத்து 763 வழக்குகளும், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 3 லட்சத்து 39 ஆயிரத்து 434 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக 76 லட்சத்து 16 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளன. விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதாக ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article