தமிழகம் முழுவதும் ஆயுதப்பூஜை விழா கோலாகலமாக கொண்டாட்டம்

7 months ago 39
தமிழகம் முழுவதும் ஆயுதப்பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நடைபெற்ற ஆயுதப்பூஜை நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். கோயம்புத்தூரில் உள்ள சிறுகுறு தொழிற்சாலைகளில் ஆயுதபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலுக்கு பயன்படும் இயந்திரங்களை அலங்கரித்து தொழிலாளர்கள் பூஜை செய்தனர். புதுச்சேரியில் ஆட்டோ நிறுத்தங்களில் ஆட்டோக்களை அலங்கரித்து வரிசையாக நிறுத்தி வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுதபூஜையை கொண்டாடி வருகின்றனர்.
Read Entire Article