சென்னை: ‘‘கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, தமிழகத்துக்கான நிதியைப் போராடிப் பெறுவேன்’’ என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்திருந்தார்.