தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் ‘GET OUT MODI’ முழக்கத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு

18 hours ago 1

சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் ‘GET OUT MODI’ முழக்கத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து கடந்த 18ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் உங்களை ‘கோ பேக் மோடி’ என்று துரத்தி அடித்தனர். மீண்டும் அதை தமிழக மக்களிடம் முயற்சி செய்தால், இந்தமுறை ‘கோ பேக் மோடி’ கிடையாது. இந்தமுறை தமிழர்கள் ‘கெட் அவுட் மோடி’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், கரூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஒன்றிய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசிய போது, ‘‘தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தால், முதலில் ‘கோ பேக் மோடி’ என்று கூறினோம். இனிமேல் ‘கெட் அவுட் மோடி’ என்று கூறுவோம்’ என உதயநிதி பேசியுள்ளார். ‘நீ சரியான ஆளாக இருந்தால் ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்லு, பார்க்கலாம்’’ என்று சவால் விட்டு பேசியிருந்தார். இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி திமுகவினர் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 2வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், ‘GET OUT MODI’ முழக்கத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கு இந்தி தெரியும்.நீங்க இந்தியில் பேசுறீங்க. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது” என குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் ‘GET OUT MODI’ முழக்கத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு appeared first on Dinakaran.

Read Entire Article