தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

4 months ago 29
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வெள்ளிக் கவசம் அணிந்து அருள்பாலித்த பெருமாளை திராள பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர். கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலில் மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்திய பக்தர்கள், பெருமாளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வழிபட்டனர்.
Read Entire Article