சென்னை,
சென்னை காமராஜர் சாலையில் பாரதியார் உருவப்படத்திற்கு இன்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"மகாகவி பாரதியார் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். ஆனால் தமிழகத்தில் துரதிருஷ்டவசமாக தி.மு.க. ஆட்சியாளர்கள் பாரதியாரை கொண்டாடுவதில்லை. அவர்கள் பாரதிக்கு பெரிய விழா எடுக்க வேண்டும். பெண்களுக்காகவும், பெண் உரிமைகளுக்காகவும் பாரதி பாடினார்.
ஆனால் பெரியாரை பெண்ணுரிமைக்கு அடையாளமாக சொல்லும் இந்த அரசு, பெரியாருக்கு முன்னாலேயே பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றி பாடிய பாரதிக்கு உரிய அங்கீகாரத்தை கொடுப்பது இல்லை. தமிழக அரசு பெண்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.