சென்னை: தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு ரேபிஸ் தடுப்பூசி உள்ளது.
ஆனால் தெரு நாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி முறையாக செலுத்தப்படாததால், மனிதர்களை நாய்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் தொற்றால் இறந்துள்ளனர்.