தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போலி மருந்து உற்பத்தி இல்லை: தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்

2 days ago 3

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போலி மருந்து உற்பத்தி இல்லை என்று மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, மாவட்டம் தோறும் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் நடத்தி வருகிறது. மருந்து கடைகள், மருந்து விநியோக நிறுவனங்கள், கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. அங்கிருந்து பெறப்படும் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உரிய விகிதத்தில் மூலப் பொருள்கள் இல்லாத மருந்துகளும், உரிய தர நிலையில் இல்லாத மருந்துகளும் உட்கொள்ள தகுதியற்றவையாக அறிவிக்கப்படுகிறது. அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article