சென்னை: தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால் தயிர் விற்பனை விலையை இன்று காலை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி நிறைகொழுப்பு பால் 500மிலி பாக்கெட் ரூ.36 லிருந்து ரூ.37, ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65லிருந்து ரூ.67, நிலைப்படுத்தப்பட்ட பால் 500மிலி பாக்கெட் ரூ.31 லிருந்து ரூ.32, ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.58 லிருந்து ரூ.60, 400கிராம் தயிர் பாக்கெட் ரூ.30லிருந்து ரூ.32, 500கிராம் தயிர் ரூ.37லிருந்து ரூ.38, ஒரு கிலோ தயிர் ரூ.66 இருந்து ரூ.68 உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை விலை உயர்வானது இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
மேலும் கடந்தாண்டில் பால் மற்றும் தயிர் விற்பனை கடும் சரிவை சந்தித்த நிலையில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை வரலாறு காணாத வகையில் குறைத்து கொள்முதல் செய்ததும், அதன் பிறகு கடந்தாண்டு நவம்பர் மாதம் இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சிறிய அளவில் மட்டும் குறைத்தது.
The post தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விற்பனை லிட்டருக்கு ரூ.2 உயர்வு appeared first on Dinakaran.