தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

2 hours ago 2

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, வடகிழக்கு பருவமழையும் விரைவில் தொடங்க உள்ளதால் வரக்கூடிய நாட்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி வரையில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, இன்று (சனிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 9-ந்தேதி (புதன்கிழமை) வரை தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

Read Entire Article