தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ மையம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

1 month ago 10

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற உதவி மையம் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவை, கர்ப்ப கால முன்கவனிப்பு, பிரசவம், தொற்று நோய்கள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும் தடுப்பூசி மற்றும் மருத்துவ முகாம்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற உதவி மையம் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற வரவேற்பு மையத்தில் நியமிக்கப்படுபவர், நோயாளிகளின் நிலையை அறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுனராக இருக்க வேண்டும். மேலும், நோயாளிகளுடன் அக்கறையுடனும், நட்புடனும் பழகக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.

காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்டவை இருப்பதுடன், நோயாளிகள் அமருவதற்கான வசதி, ‘வீல் சேர்’ ஆகியவற்றுடன், சாய்வுதள வசதியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு குறை இருந்தால், அதை தெரிவிப்பதற்கான, புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். மேலும் வரும் நோயாளிகளுக்கு உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ மையம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article