தமிழகத்தில் 5 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது

3 hours ago 1

தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 5 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 106.7 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 104.36 டிகிரி பாரன்ஹீட்

ஈரோடு - 101.48 டிகிரி பாரன்ஹீட்

பாளையங்கோட்டை - 100.4 டிகிரி பாரன்ஹீட்

பரங்கிப்பேட்டை - 100.4 டிகிரி பாரன்ஹீட்

Read Entire Article