தமிழகத்தில் 13 இடங்களில் இன்று வெயில் சதம்

4 hours ago 4

தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 13 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 105.26 டிகிரி பாரன்ஹீட்

வேலூர் - 104.2 டிகிரி பாரன்ஹீட்

ஈரோடு - 103.28 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 103.28 டிகிரி பாரன்ஹீட்

சென்னை மீனம்பாக்கம் - 103.28 டிகிரி பாரன்ஹீட்

தூத்துக்குடி - 102.5 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி - 102.3 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணி - 102.2 டிகிரி பாரன்ஹீட்

கடலூர் - 101.8 டிகிரி பாரன்ஹீட்

கரூர் பரமத்தி - 101.3 டிகிரி பாரன்ஹீட்

பரங்கிப்பேட்டை - 101.1 டிகிரி பாரன்ஹீட்

நுங்கம்பாக்கம் - 100.5 டிகிரி பாரன்ஹீட்

தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட்

Read Entire Article