தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையை வலுப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

7 hours ago 4

மதுரை: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையை வலுப்படுத்த 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எழுமலை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த மலர்விழி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "என் கணவர் 2022-ல் உயிரிழந்தார். அதிகாரிப்பட்டி கிராமத்தில் பரம்பரை சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டன. விசாரித்தபோது, தில்லையம்பல நடராஜன் என்பவர் அதிகாரிகளுடன் சேர்ந்து எங்கள் பரம்பரை சொத்துகளை மோசடியாக பட்டா மாறுதல் செய்தது தெரியவந்தது. இதை சரி செய்ய வருவாய்த் துறை அதிகாரிகளை சந்தித்தபோது ரூ.2 லட்சம் கேட்டனர். பல தவணைகளில் ரூ.2 லட்சம் வழங்கினேன்.

Read Entire Article