தமிழக மீனவர்கள் 6 பேர் விடுதலை - இலங்கை கோர்ட்டு உத்தரவு

3 hours ago 3

கொழும்பு,

கடந்த டிசம்பர் 8-ந்தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை கோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், நிபந்தனை அடிப்படையில் 6 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அதே சமயம், விசைப்படகை ஓட்டிய 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும், 40 லட்சம் இலங்கை ரூபாயை அபராதமாக தனித்தனியாக செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். 

Read Entire Article