தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி - டிடிவி தினகரன் கண்டனம்

2 months ago 11

சென்னை: “தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை அரசின் முடிவை ஆரம்ப நிலையிலேயே மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்து வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை, அவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

Read Entire Article