தமிழக பட்ஜெட் தாக்கல் - சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

3 hours ago 1

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகின்ற 14.03.2025 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரெயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது.

அதன் விவரம் :

Read Entire Article