சென்னை,
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கவர்னர் மாளிகைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை வந்த பிறகு அதற்கான ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றம் செய்த உத்தரவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, தற்போது தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு
* பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டு உள்ளது.
*மனோ தங்கராஜ், கே.எஸ்.மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராகிறார். அவர் நாளை பதவியேற்க உள்ளார்.
* உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
*சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
*ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், மனிதவள மேலாண்மைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
*வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
*நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு நாளை மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.