தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

3 months ago 25

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி 5-வது முறையாக மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகியுள்ளார். அமைச்சரவையில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டு, 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 6 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Read Entire Article