மயிலாடுதுறை, ஜூலை 16: மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க பெருந்திரளாக கலந்துகொள்ள கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் இராம.சேயோன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மயிலாடுதுறையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரின் வழிநடத்துதலோடு நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் பெருந்திரளாக கலந்து கொள்ள மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் இராம.சேயோன் அழைப்பு விடுத்துள்ளார்.
The post தமிழ முதலமைச்சர் இன்று மயிலாடுதுறை வருகை உற்சாக வரவேற்பளிக்க திரண்டு வாருங்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர் இராம.சேயோன் அழைப்பு appeared first on Dinakaran.