பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 17: பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் கட்டிடத்தில் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாததால், குறைவான அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் தபால்களை குறித்த நேரத்தில் பிரித்து அனுப்பவும், பெறவும் கால தாமதமாகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பணிக்காக தபால் அலுவலகம் வரும்போது சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப, தபால் அலுவலகத்தை பெரிய கட்டிடத்திற்கு இடம் மாற்றி, கூடுதலாக அலுவலர்களை நியமித்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post தபால் ஆபீசை இடம் மாற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.