
சென்னை,
நடிகர் ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் , இவர் 'கழுவேத்தி மூர்க்கன்', 'அநீதி', மற்றும் 'ராயன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
'ராயன்' படத்தில் தனுஷின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்திலும் துஷாரா விஜயன் பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் தற்போது சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் தனுஷ் மீது தவறான கிசுகிசுக்களையும் குற்றச்சாட்டுகளையும் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் பொய்யானவை. தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர். நடிப்பின் மீது அவர் அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
