தனுஷின் "குபேரா" தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

1 month ago 11

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜுன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'போய்வா நண்பா' வெளியாகி வைரலானது. இந்த பாடலை விவேகா எழுத, தனுஷ் பாடியுள்ளார்.

இந்நிலையில், குபேரா படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Excited to announce that the Tamil Nadu Theatrical Rights of #Kuberaa is bagged by #RomeoPictures ❤️Happy to associate with the prestigious @SVCLLP @AsianSuniel & the most versatile @dhanushkraja sir Get ready for a GRAND RELEASE on June 20, 2025 #SekharKammulasKuberaapic.twitter.com/aM17rl0XLM

— raahul (@mynameisraahul) May 16, 2025
Read Entire Article