தனுஷின் "குபேரா" 3வது பாடல் குறித்த அறிவிப்பு

3 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

The stars are set to hit the shores of Mumbai tomorrow and the coast will echo with the #Kuberaa3rdSingle A Rockstar @ThisIsDSP musical #Kuberaa in cinemas June 20, 2025.#PippiPippiDumDumDum #SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/j3CUHxkUmm

— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 9, 2025

இந்நிலையில் 'குபேரா' படத்தின் 3வது பாடல் நாளை மும்பை விழாவில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Pippi Pippi Dum Dum Dum A song that tickles the inner child in you ✨#Kuberaa3rdSingle out on June 10th. A Rockstar @ThisIsDSP musical #Kuberaa in cinemas June 20, 2025.#PippiPippiDumDumDum #SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/gDRSRBd1N6

— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 9, 2025
Read Entire Article