தனியார் மருத்துவமனையில் பணம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது

2 months ago 14
சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் ஆஷாரா என்ற மருத்துவமனையில் காசாளாராகப் பணியாற்றிய சௌமியா என்ற பெண், பணம் கையாடல் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பில் தொகையை பணமாக கட்ட சொல்லி சௌமியா வற்புறுத்துவதாக நோயாளிகள் குற்றம்சாட்டியதை அடுத்து மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் மைதிலி, கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது முறைகேடு தெரியவந்துள்ளது. மருத்துவமனையின் கியூ ஆர் கோட் வேலை செய்யவில்லை எனக் கூறி, தனது கியூ ஆர் கோடை காண்பித்து பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article