தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்

2 hours ago 1

தொண்டி, ஜன.23: தொண்டி மற்றும் சுற்றுவட்டார அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ,மாணவியரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். அதனால் பள்ளி வாகனம் மற்றும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அரசு, தனியார் பள்ளிகள் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்கள் உள்ளது. அரசு பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர்.

பள்ளி வாகனங்களிலும் தனியார் வாகனங்களிலும் அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஒரே வழித்தடத்தில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அதிகமானவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதை பள்ளி செல்லும் நேரத்தின் போதும் பள்ளி விடும் போதும் பள்ளியின் அருகில் இருந்து இந்த வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

The post தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article