தனியார் பள்ளி மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

2 months ago 12
திருச்செந்தூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக 5 மாணவிகளை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்ற பொன்சிங், விடுதி அறையில் அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து, அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கேள்விப்பட்ட பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கோவையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பொன்சிங்கை போலீசார் கைது செய்த போலீசார், பள்ளி முதல்வர், செயலாளர் ஆகியோரை திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். 
Read Entire Article