தனியார் நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: கோலார் எம்பி எம்.மல்லேஷ் பாபு

2 hours ago 2

தங்கவயல்: கோலாரில் உள்ள நரசாப்பூர் மற்றும் வேம்கல் தொழிற்பேட்டையில் செயல்படும் பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்களும், மாவட்டத்தில் உள்ள வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க‌ வேண்டும் என, கோலார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மல்லேஷ்பாபு கூறினார். கோலார் மாவட்ட கலெக்டர் டாக்டர் எம்.ஆர்.ரவி, ஏற்பாடு செய்த திஷா கூட்டத்தில் அவர் பேசும் போது, கோலார் மாவட்டத்தில் செயல்படும் சில தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை வழங்குவது கவனத்திற்கு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் கூடுதல் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். மாவட்டத்தில் மேலும் பல புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், ஒன்றிய அரசு அனைத்து சலுகைகளையும் வழங்க தயாராக இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, கோலார் நாடாளுமன்றத் தொகுதி அனைத்து முன்னேற்றங்களுடனும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.

The post தனியார் நிறுவனங்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: கோலார் எம்பி எம்.மல்லேஷ் பாபு appeared first on Dinakaran.

Read Entire Article