தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு காட்பாடியில் துணிகரம்

3 hours ago 4

 

வேலூர், ஜன.12: காட்பாடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சல்லாவூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சத்தியநாராயணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா(35). இவர்கள் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு கடந்த 9ம் தேதி சென்றனர். மீண்டும் நேற்று முன்தினம் காலை வீடு திரும்பியபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ₹7.50 லட்சம் எனக்கூறப்படுகிறது. இவற்றை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அத்துடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு காட்பாடியில் துணிகரம் appeared first on Dinakaran.

Read Entire Article