மும்பை,
மும்பையை அடுத்த மும்ரா பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் சமீபத்தில் தனது 25 வயது மனைவியின் தந்தைக்கு போன் செய்து, மனைவி தனியாக நடைபயிற்சிக்கு செல்வதால் அவருக்கு 'முத்தலாக்' மூலம் தனது திருமணத்தை ரத்து செய்வதாக கூறினார். இதை கேட்டு பெண்ணின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் பெண்ணின் கணவர் மீது கிரிமினல் மிரட்டல் மற்றும் முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் பாரதிய நியாய சன்கிதா பிரிவு 351(4) கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2019-ம் ஆண்டு முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.