சிவகங்கை: தனிப்படை போலீஸ் விசாரணையில் மரணமடைந்த திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி, இலவச வீட்டுமனைப் பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார். திரும்பி வந்தபோது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகை. ரூ.2,500 காணவில்லை என புகார் தெரிவித்தார்.