தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை..!!

1 month ago 7

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அன்புத்தம்பி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர முதலமைச்சர் நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கும், மற்றும் மதிப்பிற்குரிய ஓ.பன்னீர் செல்வம், வைகோ, வி.கே.சசிகலா, திருநாவுக்கரசர், துரைமுருகன், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், வாசன், ஏ.சி.சண்முகம், சீமான், அன்புத்தம்பி விஜய்.

என்னை வாழ்த்திய அனைத்து ஒன்றிய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரையுலகத்திலிருந்து நண்பர் கமலஹாசன், வைரமுத்து, S.P.முத்துராமன் , விஜயகுமார், சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர்கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழ் மக்கள்!! ஜெய்ஹிந்த்!!! “உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம். இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

The post தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை..!! appeared first on Dinakaran.

Read Entire Article