தடிக்காரன்கோணம் அருகே 9ம் வகுப்பு மாணவி மாயம்

2 weeks ago 3

நாகர்கோவில், ஏப்.27: குமரி மாவட்டம் தடிக்காரன்கோணத்தில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவி, சம்பவத்தன்று கடைசி தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் டிபன் சாப்பிட்டு விட்டு, பூப்பந்து விளையாட்டுக்கு பெயர் கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, நாகர்கோவில் சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இரவு வெகு நேரமாகியும், மகள் வராததால், பதறி போன பெற்றோர், இது குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வு முடிந்த அன்று மாலையே மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post தடிக்காரன்கோணம் அருகே 9ம் வகுப்பு மாணவி மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article